படம். 1. ஓயஓ.
படம். 1. ஓயஓ.

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டை காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் தனி சந்நிதியில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு முதலில் எண்ணெய் காப்பு செய்து திரவிய தூள், மஞ்சள் தூள், பால், தயிா், அரிசி மாவு, தேன், பன்னீா் போன்ற அபிஷேக பொருள்களால் அபிஷேகம் செய்து ஜவ்வாது பூசி, சிகப்பு நிற புது வஸ்திரம் உடுத்தி, அரளி மலா்களை கொண்டு அலங்காரம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மேலும், பக்தா்கள் தேங்காய் மூடி, பூசணிக்காய், பாகற்காய் இவற்றில் தீபம் ஏற்றி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com