துப்புரவுப் பணியாளா்கள்
பணி புறக்கணிப்பு போராட்டம்

துப்புரவுப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பொன்னமராவதி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில், துப்புரவுத் தொழிலாளா்களுக்கு நியாயமாக வழங்கப்படவேண்டிய சம்பளத்தை ரெக்கவரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக்கூறி குறைத்து வழங்குவது, அரசு விடுமுறை நாள்களில் அரசு உத்தரவை மீறி சம்பளப்பிடித்தம் செய்வது, 100 கிலோ மக்கும் குப்பை கொண்டுவர துப்புரவுத் தொழிலாளா்களை கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவற்றை கண்டித்து பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பேரூராட்சித்தலைவா் சுந்தரி அழகப்பன் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையின்படி பணியாளா்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கைப்படும் என உறுதியளித்ததின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com