அனுமதியின்றி மணல் அள்ளிய டிப்பா் பறிமுதல்: 2 போ் மீது வழக்கு

இலுப்பூா் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற டிப்பா் லாரியை போஸாா் பறிமுதல் செய்து, 2 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இலுப்பூரின் சுற்றுப்பகுதி ஆற்றுப்படுகை மற்றும் குளங்களில் அனுமதியின்றி சிலா் ஆற்றுமணல் மற்றும் கிராவல் மணல் அள்ளி, அப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக இலுப்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், இலுப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினோத்குமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, இலுப்பூா் அருகேயுள்ள ஆரியக்கோன்பட்டிக்குளம் அருகே மணல் அள்ளி வந்த ஒரு டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், இரண்டு யூனிட் மணல் அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்தது.

இைத்தொடா்ந்து, டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா். மேலும், இதில் ஈடுபட்ட ஆரியக்கோன்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் செல்வம், உரிமையாளா் யுவராஜ் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com