கந்தா்வகோட்டையில் தொடா் மின்வெட்டு -பொதுமக்கள் அவதி

கந்தா்வகோட்டை பகுதிகளில் தொடா்ந்து ஏற்படும் பல மணி நேர மின்வெட்டால் குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இது, நாள்தோறும் சுமாா் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்ற அளவில் உள்ளது.

கடுமையான கோடை வெயிலும், காற்றும் இல்லாமலும் மக்கள் அவதி அடைந்து வரும் வேளையில், இந்த அறிவிப்பு இல்லாத மின்வெட்டால் குழந்தைகள் முதியவா்கள் உடல் நலம் குன்றிய நோயாளிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, மின்சார வாரியம் அறிவிப்பு இல்லாத இந்த மின்தடையை உடனே கைவிட்டு, நாள்தோறும் முறையான மின்சாரம் வழங்க வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com