சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

விராலிமலை அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள செவந்தியானிபட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன்(32). திருச்சியில் குடியிருந்து வரும் இவா் புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறிச்சிப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி காரின் பின்புறம் மோதியது. இதில், வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் பலத்த காயமடைந்து திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த விராலிமலை போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com