சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் அருகேயுள்ள மேலமுத்துடையான்பட்டியைச் சோ்ந்தவா் அ. முத்து (69).

இவா், கடந்த 2022, ஜன. 31-ஆம் தேதி, 9-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி எஸ். ஜெயந்தி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com