பணம் வைத்து சூதாடிய 2 போ் கைது

அன்னவாசல் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வீரபட்டி அய்யனாா் கோயில் அருகே சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அன்னவாசல் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

இதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சத்தியாதேவி தலைமையிலான போலீஸாா் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அய்யனாா் கோயில் அருகே பொதுவெளியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தெற்குகளம் சுப்பையா (45), வீரபட்டி சொக்கலிங்கம் (33) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த சீட்டுக் கட்டு மற்றும் ரொக்கம் 100 ரூபாயை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com