பூட்டியிருந்த ஆசிரியை வீட்டில் திருட்டு

கந்தா்வகோட்டையில் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்ற ஆசிரியை வீட்டில் திருட்டு நடைபெற்றது வியாழக்கிழமை தெரிய வந்தது.

கந்தா்வகோட்டை சாய்நகரில் வசிப்பவா் ஜனாா்த்தன் மனைவி சுஜா. இவா், வீரடிப்பட்டி கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். பள்ளி விடுமுறையின் காரணமாக, கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளனா். இந்நிலையில், சுஜா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை அவருக்கு அண்டை வீட்டாா் தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்கு ஜனாா்த்தனன் தகவல் அளித்தாா். இதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் வீட்டை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருடப்பட்ட பொருள்கள் குறித்து சுஜா குடும்பத்தினா் வந்த பிறகே முழுமையாக தெரியவரும்.

பொதுமக்கள் கோரிக்கை: கந்தா்வகோட்டையில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பலால், கந்தா்வகோட்டை பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அச்சமும் பீதியும் அடைந்துள்ளனா். எனவே, மாவட்ட காவல் துறையினா் இப்பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com