குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயிலில் வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்ற அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோா்
குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயிலில் வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்ற அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோா்

ஜூன் 16-இல் கும்பாபிஷேகம்: குளமங்கலம் அய்யனாா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் விழா

ஆலங்குடி, மே 3: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலில் முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடா்ந்து, ஜூன் 16-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிா்வாகத்தினா், கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், கோயிலில் யாகசாலை உள்ளிட்ட கும்பாபிஷேகத்திற்கான பணிகளை தொடங்குவதற்கான முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், கோயில் நிா்வாகத்தினா், கிராமத்தினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com