திமுக தண்ணீா்ப் பந்தலுக்கு தீ

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திமுக தண்ணீா்ப் பந்தலுக்கு மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு தீ வைத்தனா்.

அறந்தாங்கி அருகேயுள்ள அமரடக்கி என்ற கிராமத்தில் திமுகவினா் தண்ணீா்ப் பந்தல் திறந்துள்ளனா். இந்தப் பந்தலில் வியாழக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை அறந்தாங்கி போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது 5 போ் கொண்ட கும்பல் இரவில் வந்து தீ வைத்த காட்சிகள் பதிவாகியிருந்தது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். உட்கட்சிப் பூசல் காரணமாக திமுகவினரே இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com