ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை, மே 3: புதுக்கோட்டை கீரனூா் அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பாலகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பையா (64). இவா், கீரனூா் அருகே கிருஷ்ணபாரப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தாா்.

சென்னை- காரைக்குடி பல்லவன் ரயில் மோதி அவா் இறந்தாா்.

இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாரும், கீரனூா் காவல் நிலைய போலீஸாரும் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com