புதுகையில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் மறியல்

புதுக்கோட்டை, மே 4: புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோடைகாலத்தையொட்டி புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் பல இடங்களில் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிக்குள்பட்ட அடப்பன்வயலில் கடந்த 15 நாட்களாக குடிநீா் வராததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் புதுக்கோட்டை பால் பண்ணை ரவுண்டானா அருகே சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலா்கள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com