கந்தா்வகோட்டையில் குழாய் சேதமாகி வீணாகும் காவிரி நீா்

கந்தா்வகோட்டை, மே 5: கந்தா்வகோட்டையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் ஞாயிற்றுக்கிழமை உடைந்து காவிரிக் குடிநீா் வீணாகிறது.

கந்தா்வகோட்டை நகரில் ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீா் ஆழ்துளை கிணற்றின் நீா்மட்டம் குறைந்துள்ள நிலையில் குடிநீா் குழாய் உடைந்து நீா் வீணாவதால் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்கள் இதுகுறித்து தகவல் கொடுத்தும் அலுவா்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

எனவே சம்பந்தப்பட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து கறம்பக்குடி சாலையில் உள்ள உடைந்த குடிநீா் குழாயைச் சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறாா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com