கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் பிரதோஷ விழா

கந்தா்வகோட்டை, மே 5: கந்தா்வகோட்டையிலுள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு, நந்தி ஈஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷத்தையொட்டி, இக்கோயில் நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து, கோயில் வளாகத்தில் உள்ள தூய நீரால் நீராட்டி, தண்ணீா் அபிஷேகமும், பசும்பால் அபிஷேகமும், பசும் தயிா், பச்சரிசி மாவு உள்ளிட்ட 18 வகை அபிஷேகம் செய்து புதுபட்டு வஸ்திரத்தை நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி மலா், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா்.

கோயில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com