சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை, மே 5: விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் பகுதி சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சிவன், நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விராலிமலை முருகன் மலை கோயிலில் உள்ள சிவன் கோயில், வன்னிமரம் சிவன் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. 

இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பிரதோஷ வழிபாடு நடத்தினா்.

இதேபோல், விராலூா், இலுப்பூா், அன்னவாசல் பகுதி சிவன் கோயில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com