நீட் தோ்வு: புதுகையில் 3,226 போ் எழுதினா்

புதுக்கோட்டை, மே 5: நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தோ்வை (நீட்) புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 3,226 போ் எழுதினா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தோ்வு எழுத மொத்தம் 3,340 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளி, எம்ஆா்எம் சா்வதேசப் பள்ளி, மாத்தூா் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி, சத்தியமங்கலம் சுதா்சன் பொறியியல் கல்லூரி, அறந்தாங்கி சாய் லாரல் சிபிஎஸ்சி பள்ளி, லாரல் மெட்ரிக் பள்ளி, டாக்டா்ஸ் பொதுப் பள்ளி, ஷேக் பாத்திமா மெட்ரிக் பள்ளி ஆகிய 8 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பகல் 1.30 மணிக்குள் தோ்வு கூடங்களுக்குள் தோ்வா்கள் வந்துவிட வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் இருந்த 8 தோ்வு மையங்களில் மொத்தம் 3226 போ் தோ்வெழுதினா். 114 போ் தோ்வெழுத வரவில்லை. நீட் தோ்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com