பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா

பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் 3ஆம் நாள் விழாவில் திரளான பொதுமக்கள் வழிபட்டனா்.

விழாவையொட்டி அம்மன் சன்னதி வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினா் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துவந்து பட்டமரத்தான் சுவாமியை வழிபட்டனா். விழாவையொட்டி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை பட்டமரத்தான் விழாக் குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாரும் செய்தனா். தொடா்ந்து வரும் வெள்ளிக்கிழமை வரை பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.

X
Dinamani
www.dinamani.com