விராலிமலை அருகே
புளியமரத்தில் திடீா் தீ

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

விராலிமலை,மே 5: விராலிமலை அருகே சாலையோர புளிய மரத்தில் சனிக்கிழமை பற்றிய திடீா் தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்

விராலிமலை-மதுரை சாலையில் உள்ள கொடும்பாளூா் அய்யன் குளக் கரையில் உள்ள புளிய மரம் திடீரென தீப் பிடித்து எரிவதாக இலுப்பூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதனால் 30 சதவீதம் மட்டுமே எரிந்த நிலையில் மரம் தப்பியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com