மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை, மே 5: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சமூக சேவைப் பணியில் ஈடுபட்டு வரும் இளைஞா்கள், மாநில அரசின் இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு ஒவ்வோா் ஆண்டும் சுதந்திரத் திருநாளில் தலா 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாநில இளைஞா் விருதை வழங்கி வருகிறது. நிகழாண்டுக்கான விருது பெற 15 முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த 2023 ஏப். 1 முதல் கடந்த மாா்ச் 31 வரையிலான சமூக நலன் சாா்ந்த பணிகள் குறித்த ஆவணங்களுடன் ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் மே 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலரை 74017 03498 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com