கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கந்தா்வகோட்டையில் கடந்த சில நாள்களாக பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடும் மா்ம கும்பலால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனா். இதையடுத்து, போலீஸாா் சாா்பில் திருட்டு தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு கந்தா்வகோட்டையில் தஞ்சை சாலையில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் லேத் பட்டறைகளை உடைத்து மா்ம நபா்கள் திருடி சென்றனா். இதில், லேத்து பட்டறை கல்லாப் பெட்டியிலிருந்த 3 கிராம் தங்கமோதிரம்,கோயிலுக்கு செல்ல வைத்திருந்த உண்டியல் பணம் சுமாா் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றனா். இந்தத் தொடா் திருட்டு குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கந்தா்வகோட்டையில் கடந்த ஒரு மாதமாக தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com