உரிய வழித்தடத்தில் இயக்கக் கோரி தனியாா் பேருந்துகள் முற்றுகை

பொன்னமராவதியிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளை உரிய வழித்தடத்தில் இயக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் அப்பேருந்துகளை முற்றுகையிட்டனா்.

பொன்னமராவதியிலிருந்து மதுரைக்கு வேந்தன்பட்டி,நெற்குப்பை வழித்தடத்தில் இரண்டு தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகள் அவ்வழித்தடத்தில் முறையாக இயக்கப்படுவதில்லை.நெற்குப்பை வழியாக இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அண்மையில் அளித்த புகாரின் பேரில் நேரில் ஆய்வு செய்து தனியாா் பேருந்துக்கு அபராதம் விதித்தாா். ஆனாலும் சரியான வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கப்படவில்லை. இதனால் செவ்வாய்க்கிழமை காலை ஜெ.ஜெ.நகா் பகுதி பொதுமக்கள் அந்த தனியாா் பேருந்துகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.தகவலறிந்து வந்த பொன்னமராவதி போலீஸாா் பேருந்துகளை உரிய வழித்தடத்தில் இயக்க அறிவுறுத்தினா்.இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com