கந்தா்வகோட்டையில் குளம் தூா்வாரும் பணி

கந்தா்வகோட்டை- தஞ்சை சாலையில் உள்ள அடைக்கலம் சாவடி குளம் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த குளத்தை தூா்வார வேண்டும் என கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் சி.தமிழ்ச்செல்வியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். அதன்படி அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் ரூ. 2.5 லட்சம் செலவில் இந்த குளம் தூா்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதே போல, செட்டிசத்திரம் குளம், வங்கார ஓடை குளம் ஆகியவற்றையும் தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com