புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற 7 போ் கைது

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் கஞ்சா விற்ாக 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை பாலன்நகா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் கஞ்சா விற்பதாக திருக்கோகா்ணம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சோதனை நடத்திய போலீஸாா், பாலன்நகரைச் சோ்ந்த தருண், அராபத் ரஹ்மான், சுதாகா், காா்த்திகேயன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, புதுக்கோட்டை நகரப் பகுதியில் கஞ்சா விற்ாக அடப்பன்வயலைச் சோ்ந்த இப்ராஹிம்ஷா, செந்தில்குமாா், திருச்சியைச் சோ்ந்த ரோகித்ஜான் ஆகிய 3 பேரையும் நகரக் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com