பொன்னமராவதி அருகே ஊராட்சித் தலைவா் வீட்டில் திருடியவா் கைது

பொன்னமராவதி அருகே காரையூரில் ஊராட்சித் தலைவா் வீட்டில் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் ஊராட்சி மன்றத் தலைவா் மு. முகமது இக்பால்(47). இவா் கட்டட ஒப்பந்த வேலை பாா்த்து வந்தாா். இவரிடம் காரையூரைச் சேரந்த ஆறுமுகம் மகன் வேலு(34) என்பவா் வேலைபாா்த்து வந்தாா்.

இவா், வேலை காரணமாக ஊராட்சி மன்ற தலைவா் வீட்டுக்கு அடிக்கடிசென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத் தலைவா் வீட்டில் லாக்கரில் இருந்த ரூ. 5லட்சத்தை காணவில்லையாம். இதேபோல கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே லாக்கரில் இருந்து ரூ. 3 லட்சத்து 80ஆயிரத்தையும் காணவில்லையாம்.

இதுகுறித்து காரையூா் காவல்நிலையத்தில் முகமது இக்பால் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, தொழிலாளி வேலுவிடம் விசாரணை செய்ததில் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com