பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துவந்து வழிபட்டனா்.

இக்கோயிலில் பூச்சொரிதல் விழா மே 3-ஆம்தேதி தொடங்கியது. விழாவில் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் ஒன்றியக்குழுத் தலைவா் சுதா அடைக்கலமணி தலைமையில் அலுவலக பணியாளா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். மேலும் சுமை ஆட்டோ சங்கம் சாா்பிலும் வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com