சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், வாழமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. மாரிமுத்து (63). இவா், கடந்த 2023, மே 29-ஆம் தேதி 4 வயது சிறுமியை மாட்டுக் கொட்டகைக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமியின் பெற்றோா் கீரனூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதன்பேரில், ‘போக்சோ’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மாரிமுத்துவைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக மாரிமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ், ஜெயந்தி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com