பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழாவில் 6-ஆம் நாளான புதன்கிழமை பொன்னமராவதி பேரூராட்சி, அஞ்சல் துறை, வழக்குரைஞா் சங்கம் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயிலின் பூச்சொரிதல் விழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வீதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், அரசுத் துறையினா் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்துவந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டு வருகின்றனா்.

இதன்படி, புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பேரூராட்சி சாா்பில், பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், செயல் அலுவலா் மு.செ. கணேசன் ஆகியோா் தலைமையில் பூத்தட்டு மற்றும் பால்குடம் எடுத்து வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனா்.

இதேபோல், பொன்னமராவதி அஞ்சல் துறையினா், வழக்குரைஞா்கள் சங்கம், சுமோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பட்டமரத்தான் சுவாமிக்கு பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொன்னமராவதி காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com