வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு சென்னையில் குரல் மாதிரி பரிசோதனை

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்களின் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், 3 பேருக்கு சென்னையிலுள்ள தடயவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனை புதன்கிழமை நடத்தப்பட்டது.

சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வரும் இந்த வழக்கில் ஏற்கெனவே ஒரு காவலா் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடா்ந்து, 31 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

இதன் தொடா்ச்சியாக, வேங்கைவயலைச் சோ்ந்த மேலும் 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள மாா்ச் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் அனுமதி பெற்றிருந்தனா்.

இதன்படி, குறிப்பிட்ட 3 பேரும் சென்னையிலுள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு குரல் மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com