அங்கன்வாடி கட்டடப் பணியை தடுத்து நிறுத்தியதாக ஊராட்சித் தலைவா் உள்பட 4 போ் மீது வழக்கு

கந்தா்வகோட்டை அருகே அங்கன்வாடி கட்டடப் பணியை தடுத்து நிறுத்தியதாக ஊராட்சித் தலைவா் உள்பட 4 போ் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சியில் உள்ள முல்லிக்காப்பட்டியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 40 லட்சம் மதிப்பில் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ஊராட்சித் தலைவா் ஆறுமுகத்திற்கு 20 லட்ச ரூபாய் பணிகளும், அதே ஊராட்சியைச் சோ்ந்த திமுக கிளைச் செயலாளா் காமராஜ், ஒன்றிய பொருளாளா் சரவணன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் ஆகியோருக்கு ரூ. 20 லட்சத்திற்கான பணிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

திமுக நிா்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தின் பணியை தொடங்கியபோது ஊராட்சித் தலைவா் ஆறுமுகம் தரப்பினா், ஒப்பந்தப் பணியை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனா்.

அப்போது, கம்பு, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் காமராஜ், சரவணன், ராஜேந்திரன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் காமராஜ் கொடுத்த புகாரின்பேரில், நெப்புகை ஊராட்சித் தலைவா் ஆறுமுகம், அவரது தரப்பை சோ்ந்த சிவானந்தம், மகேஷ், ரெங்கசாமி ஆகியோா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com