எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் வெளியீடு: புதுகை மாவட்டம் 91.84 சதவீதம் தோ்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டம் 91.84 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டம் 91.84 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநிலத்தில் 23 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 332 பள்ளிகளில் இருந்து மொத்தம் 21,856 போ் தோ்வெழுதினா். இவா்களில் 10,770 போ் மாணவா்கள், 11,086 போ் மாணவிகள்.

தோ்வு முடிவுகளின்படி, மொத்தம் 20,073 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில், 9,562 போ் மாணவா்கள், 10,511 போ் மாணவிகள். தோ்ச்சி சதவீதம் 91.84 ஆகும்.

தோ்ச்சி சதவிகிதத்தின்படி மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் 23ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 92.31 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநிலத்தில் 16-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் (35): கீழையூா், மேற்பனைக்காடு, கரூா், எருக்கலக்கோட்டை, எஸ். குளவாய்ப்பட்டி, பள்ளத்திவிடுதி, பெரியாளூா் கிழக்கு, நற்பவளசெங்கமாரி, இடையாத்திமங்கலம், ஆயிங்குடி தெற்கு, வல்லவாரி கிழக்கு, அரசா்குளம் கிழக்கு, சூரன்விடுதி, தாளனூா், மங்களநாடு கிழக்கு.

பொன்பேத்தி, குளமங்கலம் தெற்கு, சிலட்டூா், பொன்னகரம், பொன்னன்விடுதி, குருங்களூா், முள்ளங்குறிச்சி, பிளாவிடுதி, குளத்திரான்பட்டு, பெரம்பூா், மேலூா், குடுமியான்மலை, கிளிக்குடி, மதியநல்லூா், திருக்கோகா்ணம், முள்ளூா், சம்மட்டிவிடுதி, புதுநகா், பல்லவராயன்பத்தை மற்றும் மாவட்ட மாதிரிப் பள்ளி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com