புதுகையில் பாஜகவினா்
ஆா்ப்பாட்டம்

புதுகையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

நாட்டு மக்களை தோல் நிற ரீதியாக பாகுபடுத்தி பேசிய காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடாவைக் கண்டித்து, புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். தேசியப் பொதுக்குழு உறுப்பினா் புரட்சிக் கவிதாசன், மாவட்டப் பாா்வையாளா் பழ செல்வம், மாவட்டப் பொதுச் செயலா் குரு ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com