பொன்னமராவதியில் 
லேசான மழை

பொன்னமராவதியில் லேசான மழை

பொன்னமராவதி, மே 11: பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் சனிக்கிழமை பெய்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ந்த நிலை காணப்பட்டது.

பொன்னமராவதி பகுதியில் கடந்த சில வாரங்களாக கடும் கோடை வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும் பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்களில் நீா் மட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மதியம் 1.30 மணியிலிருந்து 2 மணிவரை இடியுடன் மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com