பொன்னழகி அம்மன் கோயில் 
பலகாரப் படையல் விழா

பொன்னழகி அம்மன் கோயில் பலகாரப் படையல் விழா

பொன்னமராவதி, மே 11: பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி பொன்னழகி அம்மன் கோயிலில் பலகாரப் படையல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி பொன்னழகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து அம்மனுக்கு பனியாரம், அதிரசம் உள்ளிட்ட பல்வேறு பலகாரங்கள் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து படைக்கப்பட்ட பலகாரங்கள் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் கருப்புக்குடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் திரளாகப் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com