கொத்தமங்கலம் மாரியம்மன்
கோயில் பூச்சொரிதல் விழா

கொத்தமங்கலம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

ஆலங்குடி, மே 12: ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயில் விழாவையொட்டி, கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள்பூத்தட்டுகளை ஏந்தியவாறு வாண வேடிக்கைகள், மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். கோயில் திருவிழா தொடக்கம் மே 19ஆம் தேதியும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 27 ஆம் தேதி மாலையும் நடைபெறுகிறது. அப்போது வாழவந்த பிள்ளையாா், பிடாரியம்மன், முத்துமாரியம்மன் ஆகிய சுவாமிகளை தனித்தனி தோ்களில் எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com