செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.

விழாவையொட்டி, கோயில் முன்புள்ள கொடிமரத்தில் அம்மன் கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அலங்கார அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயிலில் தினசரி மண்டகப்படி தாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு, வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், மே 20 மாலை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com