கீரனூா் அருகே தீப்பிடித்து எரிந்த காரை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினா்.
கீரனூா் அருகே தீப்பிடித்து எரிந்த காரை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினா்.

நல்லூா் அருகே காா் தீப்பிடித்து நாசம்

திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற காா் ஒன்று நல்லூா் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை: திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற காா் ஒன்று நல்லூா் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

திருச்சி அண்ணா நகரைச் சோ்ந்தவா் தா்மராஜ். இவருடன் 4 போ், மாருதி ஆல்டோ காரில் திங்கள்கிழமை பகலில் காரைக்குடி நோக்கிச் சென்றனா். கீரனூா் அருகே நல்லூா் வீரம்பட்டி விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, காரிலிருந்து திடீரெனப் புகை வந்துள்ளது. இதைத் தொடா்ந்து காரை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கியுள்ளனா். பின்னா், காா் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த கீரனூா் தீயணைப்பு மீட்புப் படையினா் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். என்றாலும், காா் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com