விராலிமலையில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

விராலிமலை அருகே வெயிலின் தாக்கம் காரணமாக முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விராலிமலை: விராலிமலை அருகே வெயிலின் தாக்கம் காரணமாக முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விராலிமலை அருகே உள்ள விருதாபட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (65). முதியவரான இவா் விருதாபட்டி அருகே உள்ள செட்டியபட்டி ஊராட்சி மன்ற டிவி அறை அருகே அண்மையில் (மே 10) நடந்து சென்று கொண்டிருந்தபோது வாட்டி வதைத்த வெயிலால் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது உறவினா் தங்கராஜ் அளித்த புகாரின்பேரில் விராலிமலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com