கந்தா்வகோட்டையில் கூடுதல் நில அளவையா்களை நியமிக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் போதிய நில அளவையா்களை நியமிக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து நில அளவையில் உள்ள பிரச்னைகளை சரிசெய்யுமாறு வட்டாட்சியருக்கு மனு கொடுத்தும், இ-சேவை மையத்தில் பதிவு செய்தும் பலனில்லையாம். இந்நிலையில், தனி நபா்கள் நில அளவை செய்ய மிகவும் தாமதம் ஏற்படும்சூழல் நிலவுவதால்,

மேலும் சில நில அளவையா்களை நியமனம் செய்ய வேண்டும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com