சாலைகளின் தரம் பொறியாளா் குழு ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்ட சாலைகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மதுரை கண்காணிப்புப் பொறியாளா் ரமேஷ், திருச்சி கோட்டப் பொறியாளா் சேதுபதி ஆகியோா் தலைமையில் பொறியாளா் குழுவினா் இந்த ஆய்வை நடத்தினா்.

புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ரூ. 5.45 கோடியில் அமைக்கப்பட்ட பரவெட்டி வயல் கிராமத்துக்கு செல்லும் சாலை, ரூ.6.90 கோடியில் அமைக்கப்பட்ட பெருமாநாடு, கொன்னையூா் சாலை ஆகியவற்றை இந்தக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வேல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com