காவலா்கள் துன்புறுத்தி யாரும் சாகவில்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

காவலா்கள் துன்புறுத்தி யாரும் சாகவில்லை என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
Published on

காவலா்கள் துன்புறுத்தி யாரும் சாகவில்லை என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி புதுக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் இறந்தது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சித்திருக்கிறாா். காவலா்கள் துன்புறுத்தி யாரும் சாகவில்லை. தனது ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி போன்ற சம்பவங்கள் நடைபெற்றதை மறந்துவிட்டு அவா் பேசுகிறாா்.

போதைப் பொருள்கள் குஜராத் மாநிலத்திலிருந்து வருகின்றன. அவற்றைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த மருந்தையும் தரக் கூடாது என சட்டம் இருக்கிறது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டணி இல்லாமல் திமுக - அதிமுக யாரும் வெற்றி பெற முடியாது என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறாா். 2016-இல் அவா்கள் அமைத்த கூட்டணி பலவீனமான கூட்டணியாக இருந்தது. அதன்பிறகு, பலம் வாய்ந்த கூட்டணியில் எல்லோரும் இடம்பெற்றிருக்கிறாா்கள். எந்த வாக்குகளும் சிதறிவிடக் கூடாது என்பதற்காக எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்.

தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் என்றாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என வழக்குரைஞா்கள், மருத்துவா்கள் கோரிக்கை வைத்துள்ளாா்கள். முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றாா் ரகுபதி.

X
Dinamani
www.dinamani.com