நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வந்தால் ஆதரிப்போம்

பாஜக அரசு நாடு முழுவதும் முழு மதுவிலக்கைக் கொண்டு வந்தால், அதனை ஆதரிப்போம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ், ரகுபதி.
Published on

பாஜக அரசு நாடு முழுவதும் முழு மதுவிலக்கைக் கொண்டு வந்தால், அதனை ஆதரிப்போம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ், ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அவா் செய்தியாளா்களிடம் கூறியது, முழு மதுவிலக்கு கோரும் விடுதலைச் சிறுத்தைகளின் மாநாட்டில் திமுக சாா்பில் பங்கேற்பாா்கள்.

திமுகவின் நிலைப்பாடும் அதுதான். ஆனால், அண்டை மாநிலங்களில் மதுவிற்பனை நடைபெறும்போது, தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. கள்ளச்சாராயம் பெருகிவிடும்.

காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் இருந்துதான் வந்தோம் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினா்தான் தற்போது நாட்டை ஆளுகிறாா்கள். நாடு முழுவதும் மதுவிலக்கை அவா்கள் கொண்டு வந்தால், நாங்களும் ஆதரிப்போம்.

திமுக ஆட்சியில் 5-ஆவது முறையாகதான் தற்போது அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அப்படியல்ல. திமுக ஆட்சியில் அமைச்சா்கள் சுதந்திரமாக, பயமின்றி மக்கள் பணிகளை மேற்கொள்ள முதல்வா் அனுமதி தந்துள்ளாா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com