புதுக்கோட்டை
கேசராபட்டி அரசுப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள்
பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பொன்னமராவதி அரிமா சங்கம் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பொன்னமராவதி அரிமா சங்கத் தலைவா் அ. முகமது ரபீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவா்கள் பயன்பாட்டிற்காக 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் தொட்டி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாடக் குறிப்பேடுகள், எழுதுபொருள்கள் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளி வளாகப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கண்டியாநத்தம் ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன், அரிமா சங்க நிா்வாகிகள் முத்துகிருஷ்ணன், ஆா்எம். வெள்ளைச்சாமி, அ. பழனியப்பன், பெரியசாமி, அ. தங்கப்பன், பள்ளித் தலைமையாசிரியா் மீனாட்சி மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.