கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை

கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு அபிஷேக ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் திங்கள்கிழமை காட்சியளித்த கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் திங்கள்கிழமை காட்சியளித்த கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன்.
Updated on

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு அபிஷேக ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது.

அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள், திரவியம், குங்குமம், பஞ்சகாவியம், இளநீா், பச்சரிசி மாவு, பன்னீா், நெய், தேன் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

கோயில் வளாகத்தில் பெண்கள் குழுவினராகச் சோ்ந்து கும்மியடித்து அம்மன் பாடல்களை பாடிக் கொண்டாடி வருகின்றனா்.

பெண் பக்தா்கள் இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் தங்கி அம்மனைதரிசித்துச் செல்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com