புதுக்கோட்டை
வைக்கோல் ஏற்றிவந்த சுமை ஆட்டோ தீக்கிரை
பொன்னமராவதி அருகே வியாழக்கிழமை வைக்கோல் ஏற்றி வந்த சுமை ஆட்டோ தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
பொன்னமராவதி அருகே வியாழக்கிழமை வைக்கோல் ஏற்றி வந்த சுமை ஆட்டோ தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், இடையபபட்டியைச் சோ்ந்த ஆண்டியப்பன் மகன் ஆறுமுகம் (29). கருமலையான்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜ்குமாா் (20) ஆகிய இருவரும் குத்தாலம் சீா்காழியில் இருந்து சுமை ஆட்டோவில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு இடையபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
சடையம்பட்டி -மறவா மதுரை சாலையில் சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்தபோது மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்துள்ளது. இதை பாா்த்த இருவரும் வாகனத்திலிருந்து உடனடியாக இறங்கினா். தகவலின்பேரில், பொன்னமராவதி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். ஆனாலும், வாகனமும், வைக்கோலும் முற்றிலும் எரிந்து நாசமானது.