புதுக்கோட்டை
கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்டனா்.
விராலிமலை அடுத்த கொடும்பாளூா் காளப்பனூரைச் சோ்ந்தவா் காமராஜ். இவரது வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசு அங்கிருந்த கிணற்றுக்குள் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்து தத்தளித்தது.
தகவலறிந்து வந்த இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி பசுவை கயிறு மூலம் மீட்டு மேலே கொண்டு வந்தனா்.