புதுக்கோட்டை
சாலை விபத்தில் இளைஞா் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூா் அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காந்தளூரைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் தங்கதுரை (32). மாத்தூா் பகுதி குடிநீா் பாட்டில் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவா், தனது நண்பா் பொன்னமராவதி வேந்தன்பட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா் (24) என்பவருடன் செவவாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் தஞ்சை புறவழிச்சாலை பகுதியில் வந்தாா்.
அப்போது புதுக்கோட்டையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மோதி தங்கதுரை உயிரிழந்தாா். ராஜ்குமாா் பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
மாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருச்சியைச் சோ்ந்த சண்முகநாதன் (21) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.