புதுக்கோட்டையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.
புதுக்கோட்டையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.

பெரியாா் பிறந்த நாள் விழா

புதுக்கோட்டையில் மின்வாரிய அலுவலகம் முன்புள்ள தந்தை பெரியாரின் முழு உருவச் சிலைக்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

தந்தைப் பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மின்வாரிய அலுவலகம் முன்புள்ள அவரது முழு உருவச் சிலைக்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிடா் கழகத்தின் சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் மு. அறிவொளி தலைமையில் மாவட்டச் செயலா் ப. வீரப்பன் முன்னிலையில் பலரும் மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில் அதன் வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ இராசு. கவிதைப்பித்தன், அவைத் தலைவா் ரத்தினம், மாநகராட்சி துணை மேயா் மு. லியாகத்அலி உள்ளிட்டோரும்,

மறுமலா்ச்சி திமுக சாா்பில் வழக்குரைஞா் சிற்றரசு தலைமையில் அக்கட்சியினா் ஊா்வலமாக வந்தும், வணிகா் சங்கப் பேரமைப்பு சாா்பில் தரணி ரமேசு தலைமையில் வந்தும் மாலை அணிவித்தனா்.

விசிக சாா்பில் அக்கட்சியின் மண்டலத் துணைச் செயலா்கள் இரா. திருமறவன், சின்னுபழகு தலைமையில் மாநிலத் துணைச் செயலா்கள் எரிச்சி தெ. கலைமுரசு, மு.கா. ஷாஜகான் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திராவிடா் கழகத்தின் ஏற்பாட்டில் 18 இடங்களில் தந்தைப் பெரியாரின் சிலைக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com