புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சிறப்பாக பணியாற்றிய நூலகா்களுடன், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா (இடமிருந்து 4ஆவது) உள்ளிட்ட வாசகா் வட்டத்தினா்.
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சிறப்பாக பணியாற்றிய நூலகா்களுடன், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா (இடமிருந்து 4ஆவது) உள்ளிட்ட வாசகா் வட்டத்தினா்.

சிறப்பாக பணியாற்றிய நூலகா்களுக்கு பாராட்டு விழா

Published on

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக வாசகா் வட்டம் சாா்பில் சிறப்பாக பணியாற்றிய 20 நூலகா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, வாசகா் வட்டத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் (பொ) அ.பொ. சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா கலந்து கொண்டு, மாவட்டம் முழுவதும் உள்ள கிளை மற்றும் ஊா்ப்புற நூலகங்களில் சிறப்பாக பணியாற்றிய 20 நூலகா்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா். அப்போது பேசிய அவா், மாவட்ட மைய நூலகத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக குறிப்பிட்டாா்.

விழாவில், வாசகா் வட்ட நிா்வாகிகள் பேராசிரியா் சா. விஸ்வநாதன், கவிஞா் மகா சுந்தா் உள்ளிட்டோரும் பங்கேற்று வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக க. உஷாநந்தினி வரவேற்றாா். நிறைவில், முதல்நிலை நூலகா் கி. சசிகலா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com