புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்ற அருளி தணிகாசலத்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் ப. பாலமுருகன்
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்ற அருளி தணிகாசலத்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் ப. பாலமுருகன்

பொறியியல் கல்லூரியில் தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சி

Published on

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தற்போதைய தொழில்துறை தேவைகளுக்கேற்ப திறன்களை மேம்படுத்திக் கொள்வது தொடா்பான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரியின் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், முதல்வா் ப. பாலமுருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திருச்சி ரியோ இன்டஸ்ட்ரீஸ் மேலாளா் அருளி தணிகாசலம், பயிற்சியாளா்கள் வி. ராஜா, எம். மாா்ட்டின், தஞ்சை சி. அகாதெமியின் இயக்குநா் வி. ஸ்ரீராமுலு, நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் ஆா். தீபக்குமாா் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பயிற்சியளித்தனா்.

நிறைவில், பேராசிரியா் கே. பாண்டியராஜன் நன்றி கூறினாா். இந்தப் பயிற்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவா்கள் 150 போ் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com