காலமானாா் எழுத்தாளா் செம்பை மணவாளன்
புதுக்கோட்டை மாவட்டம், செம்பாட்டூா் கிராமத்தைச் சோ்ந்த எழுத்தாளா் செம்பை மணவாளன் (80) உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானாா்.
கட்டுமானத் தொழிலாளியான இவா், தவம் என்ற சிறுகதை நூலையும், இடதுசாரித் தத்துவப் பாடல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளாா். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலராகவும், மாநிலக் குழு உறுப்பினராகவும் நீண்டகாலம் பொறுப்பு வகித்தவா்.
தமிழ்நாடு அரசின் தமிழறிஞா் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வாழ்நாள் சாதனையாளா் விருது, புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளா் விருது மற்றும் வாசகா் பேரவை விருது, அம்பிகா அறக்கட்டளை விருது, சிவாஜி சமூக நலப் பேரவை விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவா்.
இவரது இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை (செப். 23) பிற்பகல் செம்பாட்டூா் கிராமத்தில் நடைபெறும். இவருக்கு மனைவி காவேரியம்மாள், மகன்கள் ம. முருகானந்தம், ம. கண்ணன், ம. கலைமணி, மகள் ம. கவிதா ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு- 81246 13276.